அதுமட்டும் வேண்டவே வேண்டாம்: முதல்வருக்கு துணை ஜனாதிபதி எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (07:22 IST)
சமீபத்தில் ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை அமைக்க திட்டமிட்டு உள்ளார். சட்டம், நீதி, நிர்வாகம் என மூன்றுக்கும் தனித்தனி நகரங்களை தலைநகராங்களாக்க அவர் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
ஏற்கனவே அமராவதி என்ற தலைநகர் திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அரசு கையகப்படுத்தி பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த திட்டத்தை தற்போது திடீரென நிறுத்தி மூன்று தலைநகரங்கள் என்ற திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வந்திருப்பது தேவையில்லாத ஒன்று என ஆந்திர மாநில அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் ’தலைநகரை மையப்படுத்தி தான் ஒரு மாநிலத்தின் நிர்வாகம், சட்டம், நீதி ஆகியவை உள்ளது. இவை மூன்றும் ஒரே இடத்தில் இருப்பது தான் நல்லது.  இந்த விஷயத்தில் அரசியல் கண்ணோட்டம் கூடாது. எனது 40 வருட அனுபவத்தில் சொல்வதென்றால் இந்த திட்டம் நிச்சயம் பலன் அளிக்காது என்று அவர் தெரிவித்தார்
 
இருப்பினும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மூன்று தலைநகரங்கள் அமைப்பதில் உறுதியாக இருப்பதாக ஆந்திர மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்