அடுத்த அதிரடிக்கு ரெடியான ஜெகன்: சந்திரபாபு நாயுடு அப்செட்!!

புதன், 18 டிசம்பர் 2019 (11:14 IST)
ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்களை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. 
 
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் பல அறிவிப்புகளை மக்களுக்காக வழங்கி வருகிறார். 
 
இந்நிலையில் தனது அடுத்த அதிரடியாக ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறார். இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்றத்தில் பேசியதாவது... 
 
ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. வடக்கு கடலோர ஆந்திரா, மத்திய ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளின் 3 நகரங்கள் தலைநகரங்களாக இருக்கும்.  
 
விசாகப்பட்டினம் உள்கட்டுமான வசதிகளுடன் இருப்பதால் அதனை முதன்மை தலைநகராகவும், அமராவதியை சட்டமன்றத் தலைநகராகவும் , கர்நூலை நீதித்துறை தலைநகராகவும் உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். 
 
ஆனால், எதிர்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு, இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டம் என்றும், எனது அமராவதி கனவை ஜெகன் சிதைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்