சிஎஸ்.ஐஆர். என்றழைக்கப்படும் அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா குறித்து ஆராய்ச்சி நடத்தியது. இதில்10, 427 பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தபப்ட்டனர்.
இதில் அவர்களின் உடலில் சுமார் 1058 பேருக்கு கொரொனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புப் பொருள் உருவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் சில முக்கிய தகவல்கள்வெளியாகிறது.
அதன்படி, சைவ உணவு சாப்பிடுவோர், புகைப்பிடிப்போருக்கு கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு.
ஏ மற்றும் ஓ பாசிட்டிவ் புகை பிடிப்போருக்கு கொரொனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு .
பி மற்றும் ஏபி பிரிவு ரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாகவும்,
பொதுப்போக்குவரத்திலும், வீட்டு வேலைகளில் ஈடுபடுவோர், புகைப் பிடிக்காதவர்கள், அசைவ உணவு சாப்பிடுவோருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமிருக்கும் என தெரியவந்துள்ளது.