அசைவ உணவுகளுடன் நெய் சேர்க்க கூடாது... ஏன்??

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:04 IST)
நெய்யை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும், சாப்பிட கூடாது என தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. உணவில் உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. 
 
சூடாக சமைத்த உணவில் மட்டுமே சேர்க்க வேண்டும் அல்லது பசுநெய்யை உருக்கிய பிறகுதான் சாப்பிட வேண்டும். சூடு இல்லாத உணவுகள், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளில் விடக் கூடாது. 
 
பாசிப்பருப்போடு சேர்ப்பதால், இதில் உள்ள அதீதக் கொழுப்பு, பருப்பின் புரதச்சத்தோடு சேர்ந்து குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் சேர வழிவகுக்கும். 
 
பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், மீன், முட்டை, இறால் போன்ற அசைவ உணவுகளோடு சேர்க்கக் கூடாது. இரண்டிலும் கொழுப்பு அதிகம் என்பதால் செரிமானமாக தாமதமாகும்.
 
தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். 
 
உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. 
 
பாசிப்பருப்போடு நெய் சேர்த்து சாப்பிட்டால் இதில் உள்ள அதீதக் கொழுப்பு, பருப்பின் புரதச்சத்தோடு சேர்ந்து உடலுக்கு நன்மையை தரும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்