மீண்டும் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்: இம்முறை மோதியது காளை மேல்!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (14:29 IST)
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயிலான  வந்தே பாரத் ஏற்கனவே இரண்டு முறை விபத்துக்குள்ளானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் வந்தே பாரத்  ரயில் தற்போது மீண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
ஏற்கனவே எருமை மாடு மீது வந்தே பாரத் தடவை மோதிய விபத்தில் அந்த ரயிலின் முன் பாகம் சேதம் அடைந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று வந்தே பாரத் காளை மாட்டின் மீது மோதியுள்ளது.
 
மும்பையில் இருந்து காந்தி நகர் நோக்கி சென்ற வந்தே பாரத் காளை மீது மோதியதாகவும் இதனால் அந்த ரயில் மோதியதால் முன்பக்கம் சேதமடைந்தது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
 
காளை மீது மோதி விபத்துக்குள்ளான வந்தே பாரத் rஅயில் 15 நிமிடம் தாமதமாக சம்பவ இடத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கும் பாதையில் கால்நடைகளை நடமாடக் கூடாது என ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்