அபராத விதிப்பால் விபத்துக்களை தடுத்துவிட்ட முடியாது.. தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

வியாழன், 27 அக்டோபர் 2022 (16:11 IST)
அபராத விதிப்பின் மூலம் மட்டும் விபத்துகளை தடுத்துவிட முடியாது என சிபிஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
திருத்தப்பட்ட வாகன சட்டம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ள சிபிஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்
 
புதிய திருத்தப்பட்ட வாகன சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொதுமக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தமிழ்நாடு அரசுக்கு இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்