18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி - மத்திய அரசின் 1 வருட டார்கெட்!

Webdunia
திங்கள், 31 மே 2021 (13:23 IST)
இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மாநில அரசுகள் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றன.
 
இந்நிலையில், 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை கொண்டே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்