கொரோனா வைரஸ் இயற்கையாக உருவாகவில்லை! – நார்வே, பிரிட்டன் விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு!

திங்கள், 31 மே 2021 (11:15 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அது இயற்கையாக உருவாகவில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது குறித்து உலக நாட்டு விஞ்ஞானிகள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்த ஆய்வு செய்தியை டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள நார்வே, பிரிட்டன் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என்றும், வூகான் ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்