இந்தியாவில் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 3,000 உயிரிழப்புகள் பதிவு

திங்கள், 31 மே 2021 (12:16 IST)
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3,000 ஆக பதிவாகியுள்ளது. 

அதே சமயம், நாடு முழுவதும் பரவலாக வைரஸ் பரவலின் எண்ணிக்கை குறைவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
 
ஒரே நாளில் 3,128 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சிகிச்சைக்குப் பிறகு 2,38,022 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியிருப்பதாகவும் இந்திய  சுகாதாரத்துறை அமைச்சசகம் தெரிவித்துள்ளது.
 
சுகாதார அமைச்சக தரவுகளின்படி இந்தியாவில் வைரஸ் தொற்று பரவலின் வேகம் குறைந்து வந்தாலும், உயிரிழப்பு விகிதம் சரிந்ததாகத் தெரியவில்லை.

இந்திய  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 லட்சத்து 83 ஆயிரத்து 135 பேரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்