அக்டோபர் 1 முதல் தடுப்பூசி ஏற்றுமதி: மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (18:01 IST)
அக்டோபர் 1 முதல் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கொஞ்சம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது என்பதும் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள பொதுமக்களுக்கு குறிப்பாக தடுப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அக்டோபர் 1 முதல் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டது போக உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை மட்டும் தான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அடுத்த மாதம் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பது வருவதாகவும் இதனால் தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு மாநில அரசுகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்