மீடியா துறையில் களமிறங்கும் அதானி குழுமம்!

ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (10:39 IST)
எரிசக்தி, துறைமுகம், தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் அதானி குழுமம் அடுத்ததாக ஊடகத்துறையில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதற்காக ஊடகத் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த என்பவர் அதானி குழுமம் ஆரம்பிக்கும் ஊடகத்தில் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த ஊடகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதானி குழுமம் தொடங்கவிருக்கும் ஊடகம் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஆகிய இரண்டிலும் இருக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளரான சஞ்சய் புகாலிகா இந்த ஊடகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் ஊடகமாக மாற்றும் வகையில் திட்டங்களை இயற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது 
 
அனைத்து செய்திகளும் அடங்கிய இந்த ஊடகம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக மத்திய அரசுக்கு ஆதரவாகவே இந்த ஊடகம் செயல்படும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்