அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

Siva
புதன், 26 ஜூன் 2024 (17:20 IST)
நிஜாமுதீன் சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென அப்பர் பெர்த் கழன்று விழுந்ததை அடுத்து பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து நிஜாமுதீன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 15ஆம் தேதி புறப்பட்ட நிலையில் அந்த ரயிலில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியைச் சேர்ந்த அலிகான் என்ற 61 வயது பயணம் செய்தார்.

அவருக்கு அப்பர் பர்த் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அந்த படுக்கையில் இருந்தபோது அந்த படுக்கையில் இருந்த சங்கிலி கழன்று விழுந்ததில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கேமரா கேரள காங்கிரஸ் தனது சமூக வலைதளத்தில் ’மோடி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் கீழ் இயங்கி வரும் ரயில்வே துறையில் போதுமான ரயில்கள் இல்லை என்றும் எனவே பயணிகள் பாதுகாப்பாக ரயிலில் பயணம் செய்ய முடியாது என்றும் அப்படியே பயணம் செய்தாலும் உயிருக்கு பாதுகாப்பில்லை என்றும் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்பர் பெர்த்தில் இருந்த சங்கிலி சரியாக மாற்றாததால் தான் பயணி கீழே விழுந்து உயிரிழந்ததாக ரயில்வே அமைச்சகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்