மீண்டும் 2 அடுக்கு சிவப்பு நிற பேருந்து: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (18:37 IST)
மீண்டும் 2 அடுக்கு சிவப்பு நிற பேருந்து: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!
மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த இரண்டு அடுக்கு சிவப்பு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு அடுக்கு சிவப்பு பேருந்து இயங்கியது என்பதும் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த பேருந்துகளில் பயணம் செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பேருந்துகள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டு அடுக்கு சிவப்பு நிற பேருந்து இயக்க படுவதாகவும் இம்முறை பேருந்து முழுவதும் ஏசி கொண்ட மின்சார பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருகிறது என்றும் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது
 
 முதல்கட்டமாக 900 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்