ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தகவல்..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (07:54 IST)
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது வாகன உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ரூபாய் முதல் 55 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
உயர்த்தப்பட்ட இந்த புதிய கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்