நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி..!

செவ்வாய், 7 மார்ச் 2023 (10:00 IST)
நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பம் நேற்று முதல் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நீட் தேர்வில் விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்ற மாணவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 
 
இளநிலை மருத்துவ படைப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு விண்ணப்ப கட்டணத்தை கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 100 ரூபாய் அதிகரித்துள்ளதாக தேசிய தேர்வு முகமது அறிவித்திருந்தது. 
 
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு 1700 ரூபாயும் ஓபிசி பிரிவினருக்கு 1600 ரூபாயும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 1000 ரூபாயும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 9500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏப்ரல் ஆறாம் தேதி வரை இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு www.neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்