ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணம் உயர்கிறதா? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!

திங்கள், 6 மார்ச் 2023 (17:54 IST)
ஏற்கனவே டோல்கேட் கட்டணம் அதிகம் இருப்பதால் டோல்கேட் கட்டணத்தை நிறுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஏப்ரல் ஒன்று முதல் டோல்கேட் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏப்ரல் 1 முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் டோல்கேட் கட்டணங்கள் ஐந்து சதவிதம் முதல் 10 சதவிதம் வரை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
டோல்கேட் கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திடம் நெடுஞ்சாலை துறை ஆணையம் வரும் 25ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ளதாகவும் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும் ஏப்ரல் ஒன்று முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
பாஸ்ட் ட்ராக் முறையில் தற்போது கட்டண வசூல் நடப்பதால் தானாகவே ஏப்ரல் ஒன்று முதல் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைய கட்டணத்தை விட 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்