நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு? – விலைவாசி உயரும் வாய்ப்பு??

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (08:41 IST)
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் சுங்க சாவடிகளில் ஏப்ரல் முதல் சுங்கக் கட்டணம் உயர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அங்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அவ்வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தனிநபர் வாகனங்கள், ட்ராவல்கள், சரக்கு வாகனங்கள் என பயணிக்கும் வாகனங்களுக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபமாக சுங்க கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் முறை அமலில் உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி சுங்க கட்டணத்தை உயர்த்த மத்திய தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வசூலிக்கப்பட்டு வரும் சுங்க கட்டணத்தை விட 10% கட்டணம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் காரில் பயணிப்பவர்களுக்கு தற்போதைய சுங்க கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5 முதல் ரூ.15 வரை பயணிக்கும் நபர்களையும் பொறுத்து கட்டணம் கூடுதலாகும் என தெரிகிறது. உயர்த்தப்படும் சுங்க கட்டணத்தால் சரக்கு வாகனங்களுக்கான கட்டணமும் அதிகரிக்கும் என்பதால் வாகன வாடகை மற்றும் விலைவாசி உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்