ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

Prasanth K

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (15:51 IST)

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிப்பதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 

12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் கல்லூரி சேரும்போது ஏதேனும் ஒரு துறை சார்ந்த பட்டப்படிப்பை தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெறும் முறையே பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதாவது நேரடியாக கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை பயிலும் மாணவர்கள், தொலைதூர கல்வி மற்றும் திறந்த நிலை முறையில் மேலும் ஒரு பட்டப்படிப்பை தேர்வு செய்து படிக்க அனுமதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நேரடி வகுப்புகள் மூலமாக ஒரு பட்டமும், தொலைதூர கல்வி மூலம் ஒரு பட்டமும் பெற முடியும். அந்தந்த பட்டங்களில் அது குறித்த விவரங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

 

இதனால் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் நேரடி பாடத்தேர்வுகளுடன் தொடர்புடைய பிற பாடங்களையும் படித்து பட்டம் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்