வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

Mahendran

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (14:39 IST)
வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர்களை குரங்குகள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சூர் தொகுதி எம்.பி.யான மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம் பேசும்போது, "காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எழுப்பிய வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பதில் அளிக்கும்," என்று தெரிவித்தார். 
 
மேலும் குற்றச்சாட்டுகளை எழுப்பிய அந்த குரங்குகள் பதில்களை பெற நீதிமன்றத்திற்கு செல்லலாம்" என்றும் கூறினார்.
 
சுரேஷ் கோபியின் இந்த பேச்சுக்கு கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் சுரேஷ் கோபியின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஜனநாயக விரோதமானது. அவர் தனது கருத்தைத் திரும்ப பெற்று பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
 
மேலும், "பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்