75 கிமீ நீள சாலையை 105 மணி நேரத்தில்... NHAI கின்னஸ் சாதனை!!

புதன், 8 ஜூன் 2022 (11:02 IST)
75 கிமீ நீள சாலையை 105 மணி நேரத்தில் அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

 
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அமராவதி மற்றும் அகோலா இடையே 75 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையை மிகக் குறைந்த நேரத்தில் அதாவது 105 மணி 33 நிமிடங்களில் அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
 
NHAI-ன் 800 பணியாளர்கள் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 720 பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக இணை பணியாற்றி இந்த சாதனையை முடித்துள்ளனர். சாலை அமைக்கும் பணி ஜூன் 3 ஆம் தேதி காலை ஏழு மணிக்கு துவங்கி ஜூன் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெற்றிகரமாக முடிந்தது.
அமராவதி --அகோலா பகுதி தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு பகுதியாகும் மற்றும் ஒரு முக்கியமான கிழக்கு - மேற்கு வழித்தடமாகும். கனிம வளங்கள் நிறைந்த பகுதி வழியாக செல்லும் இந்த சாலை கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.
 
இந்த சாதனையின் மூலம் பிப்ரவரி 27, 2019 அன்று பதிவு செய்யப்பட்ட கத்தாரில் உள்ள பொதுப்பணித்துறை ஆணையமான அஷ்கல்-ன் சாதனையை NHAI முறியடித்துள்ளது. இந்த சாலை அல்-கோர் விரைவுச்சாலையின் ஒரு பகுதியாக இருந்தது. இது 10 நாட்களில் முடிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்