அப்துல்கலாம் பிறந்த நாளும் உலக மாணவர் தினமும்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (07:15 IST)
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக கொண்டாடி வரும் நிலையில் அவரது பிறந்த நாளான இன்று உலகம் முழுவதும் மாணவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடப்பட்டது. 
 
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் உலக மாணவர் தினமாக கொண்டாட கடந்த 2010ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் அறிவிப்பு வெளியிட்டது. 
 
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை உலக மாணவர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் மாணவர்கள் மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார் என்பதும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்களின் உழைப்பை முக்கியமானது என்று அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அப்படிப்பட்ட தியாக உள்ளம் கொண்ட அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுவது அனைத்து மாணவர்களுக்கும் பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்