அக்டோபர் 13: உலக பேரிடர் கட்டுப்பாட்டு தினம்!

புதன், 13 அக்டோபர் 2021 (06:50 IST)
அக்டோபர் 13: உலக பேரிடர் கட்டுப்பாட்டு தினம்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி உலக பேரிடர் கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
ஆண்டுதோறும் சர்வதேச இயற்கை சீரழிவு குறைப்பு தினம் அக்டோபர் 13 ஆம் தேதியை ஐநா சபை கடந்த 1989ஆம் ஆண்டில் அறிவித்தது. புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை ,சுனாமி சூறாவளி, காற்று போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் இயற்கை பேரழிவுகளை தடுத்தல், குறைத்தல் மற்றும் மக்களை இயற்கை பேரழிவில் இருந்து பாதுகாத்தல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தவே இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த தினத்தில் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்