சனாதனத்தை நிலைநாட்ட.. பிராமணர்கள் அதிகம் குழந்தை பெற்றெடுத்தால் பரிசு! - மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (09:05 IST)

நாட்டில் சனாதன தர்மத்தை பாதுகாக்க பிராமண தம்பதிகள் அதிகபட்சம் 4 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

 

 

மத்திய பிரதேச அரசின் பிராமண நலவாரியம் 4 குழந்தைகள் பெற்றெடுக்கும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து பேசிய பிராமண நல வாரியத்தின் தலைவர் விஷ்ணு ரஜவுரியா ”சனாதன தர்மத்தை பாதுகாக்க பிராமண தம்பதிகள் நான்கு குழந்தைகளை பெறுவது முக்கியம். அதனால் அவர்களில் ஒருவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும் மற்றும் மோட்ச தர்மத்தை அடைய முடியும்.

 

நாளுக்கு நாள் நாடு முன்னேறி வருவதால் நாட்டில் வளங்களுக்கு பஞ்சமில்லை. வலிமையான தேசத்தை உருவாக்கி வருகிறோம். எனவே சனாதன தர்மத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். நமது வருங்கால தலைமுறையை காக்க வேண்டியது உங்கள் கடமை” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்