மத்திய பிரதேசத்தில் கேஸ் சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலித்த ஏஜென்சி மீது வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் சுக்ரேஷ் ஜெயின் என்பவர் கடந்த 2017ம் ஆண்டில் பாரத் கேஸ் நிறுவன ஏஜென்சியில் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். அதற்காக சிலிண்டரை டெலிவரி செய்தவர் சுக்ரேஷிடம் ரூ.755 பெற்றுள்ளார். ஆனால் பில்லில் தொகை ரூ.753.50 என்று இருந்துள்ளது.
தன்னிடம் கேஸ் ஊழியர் ரூ.1.50 கூடுதலாக பெற்றதை தொடர்ந்து ஊழியரிடம் அதை சுக்ரேஷ் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கேஸ் நிறுவன ஏஜென்சி மீதும், ஊழியர் மீது சுக்ரேஷ் தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் முதலில் இவர் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தொடர்ந்து 2019ம் ஆண்டில் மீண்டும் வழக்குப்பதிவு செய்துள்ளார். இப்படியாக கடந்த 7 ஆண்டுகளாக அவர் ரூ.1.50க்காக நடத்திய போராட்டத்தின் விளைவால் சுக்ரேஷ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. சுக்ரேஷுக்கு ரூ.4 ஆயிரம் இழப்பீடாக கேஸ் ஏஜென்சி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K