பொங்கல் முடிந்து சென்னை திரும்ப முன்பதிவில்லா சிறப்பு ரயில்! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Prasanth Karthick

செவ்வாய், 14 ஜனவரி 2025 (10:03 IST)

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக மதுரை - சென்னை முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

அதன்படி வரும் 18ம் தேதி மாலை 10.45க்கு சென்னையில் புறப்படும் சிறப்பு ரயில் (06061) அன்றைய தினம் மாலை 7.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக 19ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மதுரையில் புறப்படும் சிறப்பு ரயில் (06062) இரவு 12.45 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

 

இந்த சிறப்பு ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்