மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பிச்சை எடுப்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பிச்சை போடுபவர்களுக்கும் தண்டனை உண்டு என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் என மத்திய பிரதேசம் மாநில இந்தூர் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. செயல்பாட்டுக்கு வந்த நான்கு நாட்களில் 12 பேர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் அளித்ததாகவும், உண்மை தன்மையை கண்டறிந்து அவர்களில் ஆறு பேருக்கு சன்மானம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஜனவரி 1ஆம் தேதி முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மத்திய பிரதேச மாநிலம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. யாராவது பிச்சை எடுத்தாலோ அல்லது பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டது கண்டுபிடிக்கப்பட்டாலோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிச்சைக்காரர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் சன்மானம் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.