மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மூன்று மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் வருமானத்துறை அதிகாரிகள் பிரிந்து இந்த சோதனையை ஒரே நேரமாக நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஏராளமான ரொக்க பணம், நகைகள், ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், போபால் அருகே மண்டோரா என்ற பகுதியில் உள்ள வனப்பகுதியில் கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்த நிலையில், அது குறித்து கேள்விப்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், போலீசின் உதவியுடன் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் கட்டு கட்டாக 10 கோடி ரூபாய் ரொக்க பணம், 52 கிலோ நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.