2022ல் அதிக பக்தர்கள் வருகை தந்த கோயில்.. திருப்பதிக்கு எந்த இடம்?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (09:59 IST)
2022ஆம் ஆண்டில் அதிக பக்தர்கள் வருகை தந்த கோயில் என்ற பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
 
தனியார் ஓட்டல் நிறுவனம் ஒன்று இந்த ஆண்டில் அதிகமான பக்தர்கள் பயணம் செய்த இந்திய கோயில்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 2வது இடம் பிடித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
முதலிடத்தில் காசிவிசுவநாதர் கோயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீக கலாச்சார ஆய்வு மற்றும் தங்களது ஓட்டல்களில் பக்தர்கள் செய்த முன்பதிவு அடிப்படையில் இந்த பட்டியல் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வரும் ஆண்டுகளில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிக பக்தர்கள் பயணம் செய்த கோயில்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்