தீராத பிணியை ஆரல்வாய்மொழி அருகே உள்ள இசக்கியம்மன் கோவில் உள்ள கடவுள் தீர்க்கும் என்று அந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தமிழ் மூதாட்டியான அவை மன்னர்களை வரவழைத்து பந்தல் அமைத்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள இசக்கியம்மன் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வையின் வேண்டுகோளை ஏற்று சக்தியின் மறு உருவமாக இசக்கியம்மன் ஆக இந்த கோவிலில் வந்து இருப்பதால் இந்த கோவில் மிகச் சிறந்த புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கோவிலுக்கு தீராத பிணி உள்ளவர்கள் வந்தால் ஒரு சில நாள்களில் அந்த நோய் தீர்ந்து விடும் என்றும் இசக்கி அம்மனை வழிபட்டவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ள மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்