திருப்பதி கோவில்: போலி டிக்கெட் அச்சடித்து ஆயிரக்கணக்கில் மோசடி செய்த இடைத்தரகர்கள்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (11:32 IST)
திருப்பதி கோவிலில் பல்வேறு சேவைகளுக்கு போலி டிக்கெட்டுகளை அச்சடித்து ஆயிரக்கணக்கில் மோசடி செய்த இடைத்தரகர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
 
திருப்பதி கோவில் சுப்ரபாத சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான டிக்கெட்டுக்கள் ஆன்லைனிலும் நேரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நெல்லூரை சேர்ந்த இரண்டு பக்தர்கள் சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி இருந்த நிலையில் அந்த டிக்கெட்டுகள் போலி என தெரியவந்தது இதனையடுத்து அவர்களிடம் விசாரணை செய்தபோது இடைத்தரகர்களிடம் வாங்கியதாக தகவல் அளித்தனர்
 
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் உள்பட பல்வேறு டிக்கெட்டுகளை இடைத்தரகர்களாக போலியாக அச்சடித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது 
 
இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக இடைத்தரகர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இடைத்தரகர்களை போலீசார் வலைவீசி தேடி தேடி வருவதாக கூறப்படுகிறது. இடைத்தரகர்கள் ஆயிரக் கணக்கான போலி டிக்கெட்டுக்களை அச்சடித்து பக்தர்களுக்கு விற்பனை செய்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்