இது குறித்து சிபிஎஸ்இ செயலாளர் கூறுகையில், "மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளிகளின் முதல் பணியாகும். மாணவர்களின் பாதுகாப்பு இரண்டு அம்சங்களின் கீழ் உறுதி செய்யப்பட வேண்டும். ஒன்று, சமூக விரோத சக்திகளிடமிருந்து மாணவர்களை பாதுகாப்பது. இரண்டாவது, கேலி கிண்டல் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது" என்று தெரிவித்துள்ளார்.
பள்ளியில் உள்ள முக்கிய பகுதிகளான நுழைவு வாயில்கள், வெளியேறும் பகுதிகள், படிக்கட்டுகள், வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சிசிடிவி காட்சிகளை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.