ரஷ்யா விதித்த கெடு முடிவு! உருக்காலையில் உக்ரைன் மக்கள்! – அடுத்த நடவடிக்கை என்ன?

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:47 IST)
உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைய ரஷ்யா விதித்த கெடு முடிந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி பல நாட்களாகியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலினால் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அகதிகளாக அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பல உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலுமே பல ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, உக்ரைனைன் மரியோபோல் நகரில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் மரியோபோலில் உள்ள உக்ரைன் வீரர்களை சரணடைய சொல்லி நேற்று ரஷ்யா காலக்கெடு நிர்ணயித்தது. காலக்கெடு முடிந்த நிலையில் உக்ரைன் ராணுவம் சரணடையவில்லை.

இதனால் மரியோபோலில் தாக்குதல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதேசமயம் மரியோபோல் நகர மக்கள் பலர் அங்குள்ள உருக்காலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் கதி என்னவாகுமோ என்ற பீதியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்