புதுவை-திருப்பதி ரயிலில் இருமடங்கு கட்டண உயர்வு: பயணிகள் அதிருப்தி!

வியாழன், 7 ஏப்ரல் 2022 (08:20 IST)
புதுவை-திருப்பதி ரயிலில் இருமடங்கு கட்டண உயர்வு: பயணிகள் அதிருப்தி!
புதுவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயண கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர் 
புதுவையில் இருந்து திருப்பதி பேஸஞ்சர் ரயில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்தது என்பதும் இந்த ரயில் பாசஞ்சர் ரயில் கட்டணம் மட்டுமே மிக குறைவாக பெறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்த ரயில் விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது/ இதனையடுத்து விரைவு ரயிலுக்குரிய கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது
 
இதற்கு முன்னர் பாஸஞ்சர் ரயிலாக இருந்த போது குறைந்த கட்டணம் 10 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 30 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் விரைவு ரயிலில் இருக்கக்கூடிய கழிப்பறை வசதி உள்பட பல வசதிகள் இல்லை என்றும் பயணிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்