ஜம்மு காஷ்மீர் பகுதியில் மூன்று காவலர்கள் படுகொலை…

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (11:22 IST)
ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் உள்ள கப்ரான் கிராமத்தில் இருக்கும் காவலர்களின் வீடுகளுக்கு சென்ற பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றனர்.

கடத்தப்பட்டுள்ள காவலர்களின் விவரம்: பிர்தவுஸ் அஹ்மத் குச்சே,குல்தீப் சிங்,நிசார் அஹ்மத் தோபி மற்றும் ஃபயாஸ் அஹ்மத் பட் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்ற 4 காவலர்களில் மூன்று மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு காவலர் மட்டும் உள்ளூர் மக்களின் துணையுடன் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

காவல்துறை பணியிலிருந்து விலகுமாறு பயங்கரவாதிகள் கவல்துறையினரை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காவலர்கள் தொடர்ந்து பணிக்கு சென்று வந்ததால் பயங்கரவாதிகள் காவலர்களை திட்டமிட்டு கடத்தி கொலை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்