ஜெட் ஏர்வேஸ் அலட்சியம்; பயணிகள் காது மூக்கில் ரத்தம்: விமானத்தில் பதற்றம்

வியாழன், 20 செப்டம்பர் 2018 (18:07 IST)
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் மூக்கு மற்றும் காதில் ரத்தம் வழிந்ததால் சிறிது நேரத்திற்கு விமானத்தில் பதற்றமான சூழல் நிலவியது. 
 
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றது. அதில் பயணித்த 30 பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டு மிக சிறிய இடைவெளியில் 170 பேர் உயிர் பிழைத்துள்ளனர். 
 
ஆம, விமானத்தில் ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்த காரணத்தால் பயணிகள் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டி இருக்கிறார்கள். ஆனால், விமானிகள் இருக்கும் காக்பீட்டில் உள்ள பிரஷர் கன்ரோலர் சுவிட்சை போடாததால் உள்ளுக்கு உள்ள அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு பயணிகளுக்கு அதிக அழுத்தம் காரணமாக ரத்தம் வழிந்துள்ளது. 
 
ஜெட் ஏர்சேஸ் நிறுவன ஊழியர்களின் அலட்சிய போக்கின் காரணமாகவே இவ்வாறு நடந்தது என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில் ரத்தம் அதிகமாக வந்தது சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும்தான் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்