நிமோனியா காய்ச்சலுக்கு சூடுபோட்ட தம்பதி.. மூட நம்பிக்கையால் 3 மாத குழந்தை பரிதாப பலி..!

Mahendran
வெள்ளி, 12 ஜனவரி 2024 (17:23 IST)
நிமோனியா காய்ச்சலுக்கு மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் 3 மாத குழந்தைக்கு இரும்புக்கம்பியால் சூடு வைத்த சம்பவத்தால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த  உமரியா என்ற மாவட்டத்தில் மூன்று வயது பெண் குழந்தை திடீரென நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. இதனை மூடநம்பிக்கை காரணமாக இரும்பு கம்பியை சூடாக்கி குழந்தைக்கு சூடு போட்டால் காய்ச்சல் சரியாக விடும் என்று நினைத்து குழந்தையின் தாய் சூடு போட்டதாக தெரிகிறது. 
 
இதன் காரணமாக குழந்தையின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.  குழந்தையின் பலியானதற்கு தாயின் மூட நம்பிக்கையே காரணம் என்றும், இரும்பு கம்பியால் சூடுபடுத்தியதால் தான் அந்த குழந்தை இறந்து உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.  
 
அந்த கிராமத்தில் உள்ள பலர் இதே மாதிரி செய்ததால் தான் தானும் செய்ததாக அந்த தாய் கண்ணீருடன் அழுத நிலையில்  இனிமேலும் இப்படி ஒரு மூடநம்பிக்கையை செய்ய வேண்டாம் என்று அந்த பகுதி மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்