3 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் அதிக பயன் தரும்: பரிசோதனையில் தகவல்

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (09:55 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டது
 
இந்தியாவில் கிட்டத்தட்ட நூறு கோடி பேருக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பதும் இதில் பாதி பேருக்கு மேல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களான பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் ஆகியவை நடத்திய பரிசோதனையில் 3 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்