இந்நிலையில் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுகுறித்து தென் கொரியா சென்றபோது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “வடகொரியாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் தடுப்பூசிகளை வழங்க தயாராக உள்ளோம். நாங்கள் உடனடியாக அதை செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.