கொரோனா பரிசோதனை கூட இல்லை.. மர்ம காய்ச்சலில் சிக்கிய வடகொரியா!

செவ்வாய், 17 மே 2022 (15:15 IST)
வடகொரியாவில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 14.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த 2 ஆண்டுகளில் பல நாடுகளிலும் பரவி ஏராளமான மக்களை பலி கொண்டது. ஆனால் அந்த சமயத்திலும் வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகாமல் இருந்து வந்தது உலக நாடுகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்புகள் உறுதியாக தொடங்கியுள்ளன. அங்கு ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் நாட்டிற்கே முழு முடக்கம் அறிவித்தார் கிம் ஜாங் அன்.

ஆனால் தற்சமயம் பல வடகொரிய மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை அறிய கூட வடகொரியாவில் போதுமான கொரோனா பரிசோதனை கருவிகள் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் தடுப்பூசிகள், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவையும் வடகொரியாவில் தேவையான அளவு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வடகொரியாவில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.8 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கொரோனாவாக இருக்கும் பட்சத்தில் உலக நாடுகளுக்கும் விளைவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்