ஏழுமலையானை தரிசிக்க 4 நாட்கள் காத்திருக்க வேண்டும்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:46 IST)
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து இலவச தரிசன டிக்கெட்டுகள் தினமும் 15 ஆயிரம் என வழங்கப்பட்டு வருகிறது
 
இந்நிலையில் பிப்ரவரி 21 முதல் 23 வரை யிலான இலவச தரிசன டிக்கெட்டுகள் விற்பனை ஆகி விட்டதாகவும் இன்று ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் நான்கு நாட்கள் காத்திருந்து இலவச தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதற்கு தகுந்தார்போல் பக்தர்கள் தங்கள் பயணத்தை பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டுமென்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
இன்று திருப்பதிக்கு செல்பவர்கள் 24 அல்லது 25 ஆம் தேதி தான் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்