நம்ம யார் வம்புக்கும் போறத்தில்ல..! – உக்ரைன், ரஷ்யா விமான போக்குவரத்து ரத்து!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:44 IST)
உக்ரைன், ரஷ்யா இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாடுகளுடனான விமான போக்குவரத்தை அமீரகம் ரத்து செய்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்துள்ள நிலையில், உக்ரைனில் ரஷ்ய ஆதரவு குழுவிற்கும், உக்ரைன் ராணுவத்திற்குமிடையே மோதல் தொடங்கியுள்ளது.
இதனால் பல்வேறு நாடுகளும் உக்ரைன், ரஷ்யாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனில் இருந்து தங்கள் மக்களை அழைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்