2014ல்தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது: கங்கனா ரனாவத்

Mahendran
திங்கள், 13 மே 2024 (10:18 IST)
2014ஆம் ஆண்டு தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று நடிகை கங்கனா ரனாவத் பேசியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகை கங்கனா ரனாவத்ர் பாஜக சார்பில் ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவர் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி பதவியேற்ற உடன் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தானை பிரித்து இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவித்தபோது ஏன் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார் 
 
சொல்லப்போனால் 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்னர் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என்றும் இந்த நாட்டையே இந்து நாடாக மாற்றுவதற்கான சுதந்திரம் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்