கேட்ட பதவி கிடைக்கவில்லை.. பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்?

Mahendran

சனி, 11 மே 2024 (08:54 IST)
சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கும் போது இரண்டு நிபந்தனை விதித்ததாகவும் ஒன்று தனது மனைவி ராதிகாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இன்னொன்று தனக்கு பாஜகவில் முக்கிய நிர்வாக பதவி என்று கூறியதாகவும் அதற்கு பாஜக தலைமையையும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சொன்னபடி ராதிகாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தாலும் தனக்கு ஒரு முக்கிய பதவி கொடுப்பது குறித்து பாஜக இழுத்து வருவதாகவும் அது குறித்து இன்னும் பேச்சுவார்த்தையை நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
பாஜக தேசிய தலைவரை சந்திக்க பலமுறை அப்பாயிண்ட்மெண்ட் கேட்டும் சரத்குமாருக்கு அப்பாயின்மென்ட் வழங்கப்படவில்லை என்றும் அதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் ஒருவேளை விருதுநகர் தொகுதியில் ராதிகா தோல்வி அடைந்து விட்டால் அநேகமாக சரத்குமார் கண்டுகொள்ளப்படாமல் இருந்து விடுவார் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எனவே தேர்தல் முடிவு வெளியாவதற்குள் எப்படியாவது பாஜக தலைமையை சந்தித்து ஒரு முக்கிய பதவியை பெற்று விட வேண்டும் என்று சரத்குமார் தீவிரமாக இருப்பதாகவும் தெரிகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்