முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு முன்னதாக ஹாசன் தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டன.
300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோக்களாக பிரஜ்வல் ரேவண்ணா பதிவு செய்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அடுத்து பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்ய வாய்ப்பு உருவானதால், அவர் ஜெர்மனுக்கு தப்பி சென்று
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைத்து கர்நாடகா முதல்வர் சித்த ராமையா உத்தரவிட்டார். மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் தேடப்படும் குற்றவாளியாக பிரஜ்வால் ரேவண்ணா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.