விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வேண்டும்: சம்மனுக்கு பதில் அளித்த பிரஜ்வால் ரேவண்ணா

Siva

புதன், 1 மே 2024 (16:55 IST)
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் சம்மனுக்கு பதில் அளித்துள்ளார்.
 
பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதால் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இவரது மீதான பாலியல் புகார்களை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கறிஞர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார் என்பதை பார்த்தோம். 
 
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைத்து கர்நாடகா முதல்வர் சித்த ராமையா உத்தரவிட்டார். மேலும் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்