ஆண்களா? பெண்களா? விலங்குகளா? கொரோனாவின் டார்கெட் யார்??

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (14:51 IST)
கொரோனா வைரஸ் அதிக அளவில் யாரை தாக்குகிறது என புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ். இந்நிலையில், உலக அளவில் இடைத்த புள்ளி விவரங்களை வைத்து கொரோனா வைரஸ் யாரை அதிகம் பாதிக்கிறது என யூகித்துள்ளனர். 
 
அதன் படி வயதானவர்களையும், A ரத்த பிரிவு கொண்ட நபர்களை அதிகம் பாதித்துள்ளது என ஏற்கனவே பார்த்த நிலையில், இப்போது அதிகம் பாதிப்படைந்திருப்பது ஆண்களா? பெண்களா? விலங்குகளா? என புள்ளி விவர கணக்கீடு வெளியாகியுள்ளது. 
அதன்படி, கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள் அல்ல ஆண்கள் தான் என தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கான காரணம் என்னவென தெரியவில்லை. இதேபோல கொரோனா விளங்குகளை பாதிக்குமா எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் தொற்ற மரபணு அடுக்கு தேவைப்படுகிறது, இது பெரும்பாலும் விலங்குகளிடம் இருக்காது. எனவே, மனிதர்களிடம் இருந்து தொற்று விலங்குகளுக்கு பரவாதாம். அதேபோல உருமாற்றம் அடைந்து மனிதர்களைத்தான் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்