இந்த Blood Group நபர்களை அதிகம் தாக்கும் கொரோனா: காரணம் என்ன?

புதன், 18 மார்ச் 2020 (11:18 IST)
கொரோனா வைரஸ் இந்த ரத்த பிரிவு கொண்ட நபர்களை அதிகம் தாக்குவதாக எய்ம்ஸ் இயக்குனர் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. 
 
கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. 
 
147 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, கொரோனா வைரஸால் A ரத்த வகை உள்ளவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். 
 
A வகை ரத்தம் உள்ளவர்கள் மட்டும் இதுபோன்று ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் A வகை ரத்தம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்