இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

Siva

செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (15:25 IST)
எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் நுழைய இருப்பதாகவும், இதற்கான ஆட்களை தேர்வு செய்யும் விளம்பரம் வெளியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில், பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் நுழைவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான டெஸ்லா நிறுவனத்தின் அறிவிப்பு சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில், 5 வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையில் பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ள பணிகளுக்கு மும்பையில் பணியாற்ற வேண்டும் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
 
எனவே, மும்பை மற்றும் டெல்லியில் தான் டெஸ்லா நிறுவனம் காலடி வைக்க உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்