முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்து, சொந்த வீடு வாங்கியதோடு, இந்தியர்களின் ஆவணங்களான ஆதார் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ்களையும் வங்கதேசத்தை சேர்ந்த தம்பதி பெற்றுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில், இந்த தம்பதிகள் வாழ்ந்து வருவதாகவும், அவர்களது 22 வயது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களின் ஆவணங்களை சரிபார்த்த போது, அவை அனைத்தும் போலியானவை என்பதும், ஆனால் அதே நேரத்தில் அவர்களது 22 வயது மகன் இந்தியாவில் பிறந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.