முதலமைச்சரின் மகளே இப்படி செய்யலாமா? நெட்டிசன்கள் விளாசல்

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (10:57 IST)
முதலமைச்சரின் மகளே இப்படி செய்யலாமா?
இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஒவ்வொருவரும் வெளியே வராமல் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒரு முதலமைச்சரின் மகளே பொறுப்பின்றி 500 பேர்களை அழைத்து ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமூக விதிகளை தீவிரமாக கடைபிடியுங்கள் எனவும், சமூக விலகலுக்கு சில நாட்கள் மதிப்பு கொடுங்கள் என்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றார். ஆனால் அவரது மகள் கவிதா சமீபத்தில் 500 பேருக்கு மேல் கலந்து கொண்ட ஒரு பார்ட்டியை ஐதராபாத்தில் நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் ஒன்றில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா ஏற்பாடு செய்த பார்ட்டியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் விருந்தும் பரிமாறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இது குறித்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஒரு முதலமைச்சரின் மகளே இப்படி பொறுப்பின்றி நடந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்